சட்டவிரோதமாக தாயகம் வர முற்பட்ட இலங்கை அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தநிலையில் தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை செல்ல நேற்று முன்தினம் மதியம் இராமேஸ்வரம் வந்து, பின்னர் டவுன் பஸ்சில் முகுந்தராயர்சத்திரம் சென்று, அங்கிருந்து வேனில் தனுஷ்கோடி சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திருட்டுத்தனமாக அழைத்துச் செல்ல முடியுமா என்று மீனவர்கள் சிலரிடம் விசாரித்துள்ளார். அவர்களது தகவலின்படி தனுஷ்கோடி பொலிசார், நடராஜனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Posts