சட்டவிரோதமாக சவுதியில் இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம்

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு, எதிர்வரும் 29ம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் அனைவரும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு அல்லது இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகத்திற்கு சென்று தகவலளிக்குமாறு, வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரியப்படுத்தியுள்ளது.

மேலும், தமது உறவினர்கள் யாரேனும் இவ்வாறு சவுதியில் இருப்பின் அவர்களுக்கு இந்தத் தகவலை தெரியப்படுத்துமாறும் பணியகம் கோரியுள்ளது.

அத்துடன், இந்த பொது மன்னிப்புக் காலத்தை பயன்படுத்துவோருக்கு, மீளவும் சவுதிக்கு செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts