சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட சிறுவன் உள்ளடங்கலாக 26 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts