சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர்கள் கைது!

படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts