சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுக்க முடியாது – ஜனாதிபதி

mahintha_CIசட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அளுத்கமவில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை நேற்று அளுத்கம பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்..

எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருக்கும் மக்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மேற்படி ஊடகவியலாளர்களின் இரண்டு இலட்சம் பெறுமதியான கமராக்கள் பறித்தெடுக்கப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

இருவர் பலி; அறுவரின் நிலை கவலைக்கிடம் – அஸ்லம்

Related Posts