சட்டத்துறை பட்டப்படிப்பு கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 1ம் திகதி முதல் ஏற்பு!!

இடைநிறுத்தப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன இனை அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட விரிவுரையாளர்களுடன் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்த்தன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மென்பொருள் கட்டமைப்பை அறிமுகப்படுத்தி, பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறாத 40 ஆயிரம் மாணவர்களை சேர்த்துக் கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related Posts