சட்டத்தரணியின்றி வழக்கில் வாதாடி விடுதலையான தமிழ் ஆசிரியர்!

காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் தமிழாசிரியர் ஒருவர் சட்டத்தரணியை அமர்த்தாது தானே மன்றில் முன்னிலையாகி வாதாடி விடுதலையாகியுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டமீறல் தொடர்பான வழக்கொன்றில் தாமாகவே வழக்கில் முன்னிலையாகி விடுதலையாகியுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் அனுமதியின்றி சிறிய ரக டிப்பர் ரக லொறி ஒன்றின் பின் பக்கத்தை மறைத்து பயன்படுத்தியதாக ஆசிரியர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சாலியவெல காவல்துறையினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் சட்டத்தரணி எவரையும் நியமிக்காது குறித்த ஆசிரியர் தாமாகவே மன்றில் முன்னிலையானார்.

வழக்கின்போது கேட்கப்பட்ட குறுக்குக் கேள்விகளுக்கு ஆசிரியர் தர்க்கரீதியாகப் பதிலளித்தார். அத்துடன் வடக்குத் தொடுநர்கள்மீது ஆசிரியரும் குறுக்கு விசாரணையை மேற்கொண்டார்.

இதனையடுத்து, சந்தேகநபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறியதனால் சந்தேகநபரை குற்றமற்றவர் எனத் தீர்மானித்து விடுதலை செய்வதாக நீதவான் பந்துல குணரட்ன அறிவித்துள்ளார்.

Related Posts