சட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்?! நீதவான்களும் ஆதரவு

Supreme-Court-buildingசட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நாடாளுமன்றில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்வை வெளியிடும் வகையில் சட்டத்தரணிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.

சட்டத்தரணிகளின் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என நீதவான்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்கள் அறிவித்துள்ளனர்.

Related Posts