தேர்தல் காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவர் உட்பட அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்கள் என இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைக்கு அனுப்பியமை தொடர்பில் மேற்படி பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கபெற்றிருப்பதாக கனகராஜ் கூறினார்.
அதேபோல், புங்குடுதீவு பகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக அரச உத்தியோகஸ்தர் ஒருவர் பிரசாரம் செய்தமை தொடர்பில் கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தேர்தல் அண்மித்த காலம் அதற்கு பின்னராக காலப்பகுதியில் அரச அதிகாரிகள் ஒழுங்கு மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குவதற்குரிய வசதியினை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.