சட்டக் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சை 30 ஆம் திகதி

இலங்கை சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2018 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே இப்போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், குறித்த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டை கடந்த 15 ஆம் திகதி தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் 0112785230/ 0112177075 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts