சட்டக்கல்லூரியில் கற்கையினை மேற்கொள்பவர்களுக்கு வயதெல்லைக்கான வரையறை நீக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு முதல் சட்டக்கல்லூரியில் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிகாண் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு வயதெல்லையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுவரைக்கும் சட்டம் தொடர்பான கற்கை நெறிக்கான தகுதிப்பரீட்சைக்கு தோற்றுபவர்கள் 35 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை காணப்பட்டது.ஆனால் இவ்வாண்டு முதல் இந்நிலையில் குறிப்பிட்ட வயதிற்கான வரையறை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் சட்டக்கல்லூரியின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
- Wednesday
- January 22nd, 2025