நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அரிசி, சீனி, மரக்கறிவகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரிதகதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ 90-100 ரூபா வரையிலும், தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 120 முதல் 145 ரூபா வரையிலும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது..
சிலதினங்களுக்குள் சீனியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து சென்றுள்ளதாகவும். ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 120 மதல் 125 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காடியுள்ளனர்.
அண்மையில் ஒரு கிலோ சீனிக்கு 30 ரூபா வரி விதிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மரக்கறி வகைகளின் விலைகளும் அண்மைக் காலமாக உயர்வடைந்து செல்வதனால் மக்கள் மரக்கறி நுகர்வினை குறைத்து வருவதாக சந்தை வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.