சடலங்களை அப்புறப்படுத்தும் 1000 உறைகளை கோரியுள்ள சுகாதார அமைச்சு

நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இறப்புக்கள் பதிவானால் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான 1000 உறைகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் சுகாதார அமைச்சு கோரியிருக்கிறது.

கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தடயவியல் ஒருங்கிணைப்பாளருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வைரஸ் பரவல் தீவிரமடையாவிட்டாலும் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts