எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் வடமாகாண மக்கள் 1000 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வருகை தந்து ஆயிரம் தேங்காய்களை உடைத்து வழிபாடு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற மக்கள் சுமார் 250 பேருக்கு மேற்பட்டவர்கள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் முன்றலில் ஒன்று கூடி ஆலயத்தில் ஆயிரம் தேங்காய்களை உடைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி வழிபாடு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, வெகுவிரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான நேரத்தை வழங்கும்படி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.