சச்சின் படத்திற்கு இசையமைக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாத ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய மற்றும் உலக ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினின் சாதனைகள் எண்ணிலடங்காதது, அதை நாம் சொல்லி தெரிய தேவையில்லை.

tendulcar-scatchin-rahman

இதுநாள் வரை கிரிக்கெட் விளையாடி வந்தவர், இப்போது சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார். அதுவும் தன்னுடைய வாழ்க்கை படத்தில் அவர் நடித்து வருகிறார்.

விளையாட்டு தொடர்பான ஆவணப்படங்களை எடுக்கும் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின், சச்சினின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு முழுநீள படம் இயக்குகிறார். இப்படத்தில் சச்சினாக, சச்சினே நடிக்கிறார்.

படத்திற்கு சச்சின் எ மில்லியன் ட்ரீம்ஸ் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் மற்றொரு ஹைலைட்டாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட்டிங் ஆகி கொண்டிருக்கிறது. அதோடு படத்தின் டீசரும் நாளை வெளியாக இருக்கிறது.

Related Posts