நேற்றைய ஐ.பி.எல். போட்டியின் போது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கினார். இது சமூக வலை தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஐ.பி.எல். சீசன் 9-வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விசாகபட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
இந்த போட்டியில் வெற்றி பின் வீரர்களுக்கு கைகுலுக்கும் போது சன்ரைசர்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங் சச்சின் டெண்டுகல்கரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். யுவராஜ் சிங் சச்சினின் காலில் விழுந்து ஆசி பெறுவது இது முதல் முறையல்ல. 2014-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் இதே போல் சச்சின் காலில் விழுந்து யுவராஜ் சிங் ஆசி பெற்றார்.