Ad Widget

சச்சினின் சாதனையை முறியடித்த குக்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை இங்கிலாந்து கப்டன் அலெஸ்டர் குக் முறியடித்துள்ளார்.

Alastair Cook

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

இதில் 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அலெஸ்டர் குக் 10,000 ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை 127 டெஸ்டில் பங்கேற்று 31 வயது 5 மாதத்தில், அலெஸ்டர் குக் புரிந்துள்ளார்.

10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீர்ர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர், தனது 10 ஆயிரமாவது ஒட்டத்தை, 31-வது வயது 10 மாதங்களில் எடுத்து சாதனை படைத்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் இந்த சாதனையை சச்சின் புரிந்தார். அதாவது இது நாள் வரை குறைந்த வயதில் 10000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கருக்கு உரியதாக இருந்தது. அதனை இங்கிலாந்து இடதுகை துடுப்பாட்ட வீரரும் கப்டனுமான அலெஸ்டர் குக் முறியடித்துள்ளார்.

இருப்பினும் குறைந்த போட்டிகளில் 10000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனை சச்சினுக்கு உரியதாகும். ஏனெனில் சச்சின் 122 போட்டிகளிலேயே 10000 ஓட்டங்களைக் கடந்து சாதித்துள்ளார். சாதனை புரிந்த அலெஸ்டர் குக்குக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts