சங்கா மஹேல இலங்கை இரசிகர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 5ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்து.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குமார் சங்கக்கார,

கடந்த காலங்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணி சிறப்பான சாதனை வெற்றிகளை பதிவு செய்திருந்தது. எனினும் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் சிறப்பாக விளையாடியிருந்தது.

பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக இருக்கின்றது. இலங்கை அணி இந்த தோல்வியிலிருந்து மீள வேண்டும்.

வாழ்க்கையில் தவறுகள் செய்யாமல் படிப்பினைகளை பெற்றுகொள்ள முடியாது. இந்நேரத்தில் இலங்கை அணிக்கு அனைத்து இலங்கை ரசிகர்களும் ஆதரவு செலுத்த வேண்டும். எனது ஆதரவு எப்போதும் இலங்கை அணியுடன் இருக்கும்.

மஹேல ஜயவர்தன

இலங்கை அணி சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டிருந்தது. எனினும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. இலங்கை வீரர்களுக்கு கடும் பயிற்சி தேவை. எதிர்காலத்தில் இதைவிட சிறப்பான போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். இலங்கை ரசிகர்கள் இந்நேரத்தில் இலங்கை அணியுடன் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

Related Posts