சங்கா, சனத், மஹல வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரபல கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய மஹல ஜயவர்தன ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் மூலம் இருவரும் இவ்வாறு கருத்துரைத்துள்ளனர்.

இன அல்லது மதத்தின் அடிப்படையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட இடமளிக்கப்பட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரே நாடு , ஒரே மக்கள் என்ற எண்ணக்கருவுடன் அன்புடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கி நகர்வோம் எனவும், வன்முறைகள் மற்றும் இனவாதத்திற்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். புத்தி சாதூரியமாகவும், ஒற்றுமையுடனும் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். வன்முறைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது தொடர்பில் மஹல ஜயவர்தன குறிப்பிடுகையில்

மீண்டும் நாட்டில் ஓர் சிவில் யுத்தம் ஏற்படுவதனை விரும்பவில்லை என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் மஹல ஜயவர்தன பதிவிட்ட டுவிட்டரில் பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள அவர் தாம் வளர்ந்த 25 ஆண்டுகளாக சிவில் யுத்தம் நாட்டில் நீடித்தது எனவும், அடுத்த தலைமுறையினரையும் சிவில் யுத்தம் பாதிக்கக் கூடாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார். வன்முறைகளில் ஈடுபட்ட அனைவரும் தராதரம் பாராது நீதியின் முன் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனவும் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related Posts