தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார்.
இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதேவேளை இன்றைய தினம ஆரம்பம் ஆகும் இந்திய இலங்கை போட்டியுடன் சங்கக்கார தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு விடை கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.