சங்காவின் மற்றுமொரு சாதனை!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கையர் என்ற பெருமையை குமார் சங்கக்காரா தனதாக்கிக் கொண்டுள்ளார்.

chankakara-cricket

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முந்தினம் (29) ​வெலிங்டனில் இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை வீரர்களின் பொறுமையான ஆட்டத்தின் மூலம் அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது.

இப்போட்டியில் இலங்கையணியின் வீரர் குமார் சங்கக்காரா ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களைப் பெற்றார். இவ் ஓட்டங்களைப் பெற்றமையின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர் என்ற பெருமையை அவர் நிலைநாட்டியுள்ளார்.

இதன் மூலம் 396 போட்டிகளில் கலந்து கொண்ட சங்கா 13 580 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முன்னதாக இச்சாதனையை சனத் ஜயசூரிய வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts