சக வீரர்களுக்காக குளிர்பானம் ஏந்திய டோனி : ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், தற்போதைய வீரருமான மகேந்திரசிங் டோனி மைதானத்திலிருந்த இந்திய அணியின் வீரர்களுக்கு குளிர்பானங்கள் கொண்டுவந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியின் போதே டோனி குளிர்பாணங்களுடன் மைதானத்துக்குள் நுளைந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர்.

உலகில் முன்னணி கிரிக்கெட் வீரரான டோனியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Related Posts