சகிப்பின்மைக்கு எதிரான போராட்டங்கள் கவித்துவமானவை – ஏ.ஆர்.ரஹ்மான்

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் வன்முறையில்லாமல் கவித்துவமாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரகுமான் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறையற்றதாக இருப்பதே சிறந்தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். புரட்சியை அகிம்சை மூலம் கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர் மகாத்மா காந்தி” என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சகிப்பின்மை பற்றிய அமீர் கானின் கருத்து கடும் விவாதத்தை எற்படுத்தியுள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Posts