நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அச்சம், சந்தேகங்களை நீக்கி சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வருமாறு சகல சமயத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது, நீதி அல்லது புதிதாக நிறைவேற்றப்படும் சட்டமூலங்களால் மட்டுமே இயன்றதல்ல எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் அவற்றை மதக் கோட்பாடுகளின் மூலமே செயற்படுத்தப்பட முடியும் எனவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
களுத்துரை – பயாகல ஹிந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் மாட்டிறைச்சியை இல்லாதொழிக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாட்டிறைச்சிக்கு நிலவும் கேள்வியை பூர்த்தி செய்ய அவற்றை வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யுமாறு நிதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.