சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும்!

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதரண தரப் பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதோடு பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களாக கொண்டு பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிட்டுப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts