க.பொ.த சா. தர பரீட்சை முறைக்கேடுகள் தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற ஹொட்லைன் இலக்கம் அல்லது 0112785211 பொது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

telephone-1911

இன்று (09) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 4,279 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகிறது. 577,220 மாணவர்கள் தோற்றவுள்ள இப்பரீட்சையில் 370,739 பேர் பாடசாலை ரீதியாகவும் மிகுதி 206,481 பேர் தனிப்பட்ட ரீதியிலும் தோற்றகின்றனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை- பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்த பகுதிகளில் சுமார் 10 000 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts