க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும், 2022ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
adstudio.cloud

Related Posts