கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்துக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது.
எந்த காரணத்தையும் கொண்டும் இந்த கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
இம்முறை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ள பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை கடந்த 25 ஆம் திகதி நிறைவடைந்தது.