க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!!

2024 (2025) க்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் இணையவழியூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்ட அறிக்கையில் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்களின் பரீட்சை விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இணையவழியூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும். அதேநேரத்தில் எந்த வகையான கால நீடிப்புகளும் வழங்கப்படாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0112784208/ 0112784537/ 0112785922 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Related Posts