க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(20.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கூறகையில்,“பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஜனவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இரண்டு பிரதான பரீட்சைகளுக்கும் இடையே 3 மாதகால இடைவெளி அவசியம்.

இதன்காரணமாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மேலும் தாமதமாகக்கூடும்.இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டப்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும்.” என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts