க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப்பரீட்சையின், தொழில்நுட்பப் பாடத்துக்கான செயற்முறைப் பரீட்சையின் நடவடிக்கைகளுக்கு அதிக காலம் எடுக்க வேண்டியுள்ளமையே பெறுபேறு தாமதமாக காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு சுமார் 7 லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியதனாலும், திணைக்களத்துக்கு பாரிய பொறுப்புக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இதற்கு மத்திலேயே உயர்தரப் பெறுபேறுகளையும் வெளியிட ஏற்பாடு செய்யவேண்டியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.