க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகிறது

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

உயர் தரப் பரீட்சையில் 2,34,197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62,134 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts