க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்

க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக்கான அனுமதி பத்திரங்களில் மாற்றங்கள் காணப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு விண்ணப்பதாரிகளிடம் அந்த திணைக்களம் கோரியுள்ளது.

தாம் விண்ணப்பித்த பாடங்கள் மற்றும் மொழி தொடர்பாக நன்கு அவதானம் செலுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனுமதி பத்திரத்தில் ஏதாவது பிரச்சினை காணப்பட்டால் அது தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள விஷேட தொலை பேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே 011 27 84 208, 011 27 84 537 அல்லது 1911 ஆகிய தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக மேலும் தகவல்களை பெற்று கொள்ளலாம்.

Related Posts