க.பொ.த. உயர்தர பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சங்கீதம், நடனம் மற்றும் ஓவியம் போன்ற பாடங்களுக்கான செயற்பாட்டுப் பரீட்சை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலும், உயிரியல் வள தொழில்நுட்பத்துடன் தொடர்பான செயற்பாட்டுப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
பொறியியல் தொழில்நுட்ப துறையுடன் தொடர்பான செயற்பாட்டுப் பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த செயற்பாட்டுப் பரீட்சைகள் நடைபெறும் நிலையங்கள் தொடர்பிலான விபரங்கள் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.