க.பொ.த உயர்தரம் 2015 GIT பரீட்சை நாளை மறுதினம்

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள இவ்வாண்டு 12ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை (GIT) நாளை மறுதினம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சை நாடளாவிய ரீதியில் 1176 மத்தியநிலையங்களில் எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் 236 பரீட்சை தொடர்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய சிங்கள மொழியில் 110,257 பேரும் தமிழ் மொழியில் 27,391 பேரும் ஆங்கில மொழியில் 12,136 பேருமாக மொத்தம் 1, 49784 பேர் இப்பரீட்சையில் தோற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

பரீட்​சைக்கான அனுமதிப்பத்திரங்களும் பாடசாலை அதிபர்களுக்கு கடந்த 7ஆம் திகதி தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் அல்லது விண்ணப்பதாரி பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் கிளையுடன் 0112 784208 அல்லது 0112 784537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts