க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைகளுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts