க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் இ.டபிள்யு.எல்.கே.எகொடவெல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை சூழலை பேணுவதற்கு இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும் குறித்த பாடசாலைகளுக்கு உரிய பணியிடங்களை பரிந்துரைப்பதற்கும் கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் உள்ளூராட்சி கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணிக்கமர்த்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

Related Posts