க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித் தினம் நாளை!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித்திகதி நாளையாகும். இத்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித்திகதி கடந்த 13 ஆம் திகதியுடன் முடிவடைந்தது என்று குறிப்பிட்ட பிரதி ஆணையாளர் நாயகம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திகதி நாளை வரை நீடிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமுகமளிக்கவில்லை. இதனால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts