க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை

015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார்.

நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்­தி­னையும் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பி­வைப்­ப­தோடு தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களின் பெறு­பே­றுகள் அனைத்­தி­னையும் அவர்­களின் முக­வ­ரிக்கு தபால் மூலம் அனுப்­பி­வைக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அமைந்­துள்ள பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்­ப­கு­மார மேற்­கண்ட தக­வலை தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஆண்டு நடை­பெற்று முடிந்த க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சை­யா­னது நாட­ளா­விய ரீதியில் உள்ள 2180 பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் இடம்­பெற்­றது. இவற்றில் பாட­சாலை பரீட்­சார்த்­திகள் 2,36,072 பேரும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­திகள் 72,997 பேரும் உள்­ள­டங்­க­லாக மொத்­த­மாக 3,09,069 பேர் தோற்­றி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் குறித்த பரீட்­சையின் பெறு­பே­றுகள் நேற்று முன்­தினம் 31 ஆம் திகதி வெளி­யி­டப்­ப­படும் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­தி­ருந்த நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பரீட்சை பெறுபேறுகளை நாளை 3 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related Posts