பயிற்சிப் போட்டியொன்றின் போது உபாதைக்குள்ளான இலங்கை கிரிக்கட் அணி வீரர் கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முன்னிட்டு பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் கடந்த 24ம் திகதி நடைபெற்ற பயிற்சி போட்டியொன்றின் போது தினேஷ் சந்திமால் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் ஷோர்ட் லெக் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது தலையில் பந்து பட்டதால் கௌஷால் சில்வா உபாதைக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் நேற்றைய தினமளவில் முன்னேற்றம் காணப்படுகின்றது எனவும் அவர் விரைவில் பயிற்சிகளில் பங்கேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.