கௌதாரிமுனை மணல் அகழ்வு தடுப்பு

முறையற்ற வகையில் அனுமதி பெறப்பட்டு பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

Ainkaranesan

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ‘பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் அனுமதியில்லாமல் நேரடியாக புவிச்சரிதவியல் அனுமதி பெறப்பட்டுள்ளது’ என்றார்.

‘மணல் அகழ்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட உயிலங்காடு என்னும் இடத்தில் மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் கௌதாரிமுனை, மண்ணித்தலை என்னும் இடத்தில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்று படிவங்களை பரிசோதனை செய்து, மணல் அகழ்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாக’ அமைச்சர் கூறினார்.

Related Posts