கோவிட்-19 நோயாளிகள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்தை உட்கொள்ள வேண்டும்!!

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மருத்துவ வல்லுநர் பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அறிகுறிகளின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் மருந்து தீர்மானிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 தடுப்பூசியின் மூன்று அலகுகளையும் பெற்ற பின்னர் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறுகிய கால காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ வல்லுநர் பிரியங்கர ஜயவர்தன கூறினார்.

சாதாரண காய்ச்சலுக்கு படுக்கை ஓய்வு சிறந்த தீர்வாகும் என்பது அனைவரும் அறிந்ததே, அதே சமயம் நீரிழப்பு தவிர்க்க போதுமான அளவு திரவங்களை உட்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பரசிட்டமோல் தேவைக்கேற்ப உட்கொள்ள வேண்டும்.

ஒரு நபர் அதிகப்படியான தும்மலினால் அவதிப்பட்டால், அவர்கள் நாசி சொட்டுகளைப் பெறலாம், அதே நேரத்தில் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குளோர்பெனமைன் (Chlorphenamine) அல்லது சளி அல்லது இருமலுக்கு பொருத்தமான பிற மருந்துகளை பெற வேண்டும்.

ஒரு நபருக்கு மூச்சுத்திணறல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், இன்ஹேலரை பரிந்துரைக்கலாம். கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு பக்டீரியா தொற்று ஏற்பட்டால் மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படும்” என்றும் மருத்துவ வல்லுநர் பிரியங்கர ஜயவர்தன குறிப்பிட்டார்.

Related Posts