கோவிட் வைரஸை செயற்கையாகவே உருவாக்கி அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதா??

2015 ஆம் ஆண்டு கோவிட் உயிரி ஆயுதத்தை உருவாக்கம் செய்ய சீனா திட்டமிட்டிருந்தமை தொடர்பான சீன ராணுவ ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரிலிருந்து கோவிட் வைரஸ் முதல்முறையாக பரவி உலக நாடுகளுக்கும் பரவியது.

இந்த வைரஸ் வுகானில் உள்ள பரிசோதனை கூடத்திலிருந்து தெரியாமல் வெளியேறியிருக்கலாம் என்றும் இவை வேண்டுமென்றே சீனாவால் உருவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது என்றும் பல தரப்பிலான கருத்துகள் உலா வருகின்றன.

இந்த நிலையில் கோவிட் வைரஸ் என்ற ஒரு வைரஸை செயற்கையாகவே உருவாக்கி அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது.

அந்த ஆவணங்களில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கோவிட் தொற்று உலகுக்கு தெரியவதற்கு முன்பே அதை ஆயுதமாக்க சீன ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

மூன்றாம் உலக போரை எதிர்த்து போராட இந்த கோவிட் வைரஸ்கள் பயன்படுத்தப்படலாம் என மூத்த விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த வைரஸ் புதிதாக உருவாக்கப்பட்டது போல் இல்லாமல் இயற்கையாக உருவானது போன்று வைரஸை உருவாக்கவும் விஞ்ஞானிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கோவிட் பரவலில் சீனாவின் பங்கு குறித்து தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் சீனாவின் வெளிப்படைத்தன்மையை கேள்வி எழுப்பிகிறது. சார்ஸ் வைரஸின் செயற்கையான தோற்றம் மற்றும் உயிரி ஆயுதமாக மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்களின் புதிய இனங்கள் என்ற தலைப்பில் சீன ராணுவ ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன.

உயிரி ஆயுதத்திர்கு சீன ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த உயிரி ஆயுதத்தை வைத்து எதிர் நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சிதைக்க முடியும் என அந்த ஆவணங்களில் சீன மொழியில் கூறுகின்றன. இந்த ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த கோவிட் வைரஸ் ஏன் சீனாவின் பயோ வெப்பனாக இருக்கக் கூடாது என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வைரஸை சீனாவே தனது பரிசோதனை கூடத்தில் உருவாக்கியிருக்கக் கூடும். பொருளாதார லாபத்திற்காக இந்த வைரஸை உயிரி ஆயுதமாக சீனா பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் என புகார் எழுப்பியிருந்தார்.

புதிய போரை நம்மால் சந்திக்க முடியாதா என போல்சனேரோ கேள்வி எழுப்பியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவுஸ்திரேலிய நாட்டு அரசியல்வாதி ஜேம்ஸ் பேட்டர்சன் கூறுகையில்,

சீன நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு இது போன்று ஒரு ஆலோசனையை கொடுத்தவர்களின் எண்ணங்கள் குறித்து மிகப்பெரிய வேதனை ஏற்படுகிறது. அதிக பாதுகாப்பில் வைத்திருந்தாலும் இது போன்ற ஆயுதங்கள் மிகவும் மோசமானவை என்றார்.

Related Posts