கோவா செல்லும் விஜய் 59 படக்குழு

‘புலி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘காக்கி’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவளி தினத்தன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வமான தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏதும் வரவில்லை. விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டமாக கோவா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் பாடல் காட்சிகள் அல்லது முக்கியமான காட்சிகளை படமாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Posts