களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் தாயொருவரை கோழிக் கூண்டில் அடைத்து சங்கிலியால் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம் வயோதிப தாயொருவர் கோழிக் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த தாய் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தயான அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இரவு நேரங்களில் சங்கிலியால் கட்டி வைக்கப்படுவதாக அவரது மகள் கல்கமுவ பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த தாய்க்கான உணவு வழங்குதல், குளிக்க வைத்தல் போன்றவைகள் தன்னால் மேற்கொள்ளப்படுவதாகவும் தனது கணவர் அவரை விட்டு சென்றுள்ளமையினால் மிகவும் கஷ்டமான நிலையில் தாயாரை பார்த்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் அந்த தாயை அலட்சியப்படுத்தியமை மற்றும் கொடுமை படுத்தியமை காரணமாக கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது