கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவி சாதனை

கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண மஹாஜனா கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் அனிதா என்ற மாணவியே அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று சாதனையை படைத்துள்ளார்.

2012ம் ஆண்டு தேசிய பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் அனோமா கருணாசேன என்ற மாணவி 19 வயதுக்கு உட்பட்ட கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில் 3.0 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.

இந்த ஆண்டு குறித்த சாதனையை அனிதா 3.32 மீற்றர் உயரம் பாய்ந்து முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts