தெல்லிப்பளை மகாஜன மாணவி சாதனை

42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி புதிய சாதனை படைத்துள்ளார்.42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 29 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.

aniththa-1

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில், ஜெகதீஸ்வரன் அனித்தா 3.41 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசிய மட்ட சாதனையை முடியறித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற படைவீரர்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் இராணுவ வீராங்கனையான கசிந்தா நிலுக்‌ஷி, 3.40 மீற்றர் உயரத்தை தாண்டி நிலைநாட்டிய சாதனையையே அனித்தா முறியடித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், அனித்தாவினால் தேசிய மட்டத்தில் 3.35 மீற்றர் என நிலைநாட்டப்பட்ட சாதனையை குறித்த இராணுவ வீராங்கனை 3.40 மீற்றர் பாய்ந்து முறியடித்திருந்தார்.

எனினும் இராணுவ வீராங்கனையின் சாதனையை அனித்தா மீண்டும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts