கோலி, புஜாரா சதம்; இந்தியா ஆதிக்கம்

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பித்தது. இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

Virat Kohli

அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, முதலாம் நாள் ஆட்ட முடிவின்போது, நான்கு விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தற்போது களத்தில், விராத் கோலி 151 ஓட்டங்களுடனும் இரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு ஓட்டத்துடனும் உள்ளனர். முன்னதாக, செட்டேஸ்வர் புஜாரா 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டுவேர்ட் ப்ரோட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

Related Posts