கோலியின் சாதனைக்கு நெருக்கடி??

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நேற்றைய போட்டியில் சதமடித்த தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லா ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 5 ஆயிரம் ஓட்டங்கள் என்ற சாதனையை நெருங்கி வருகின்றார்.

hashim-amla_0

இந்நிலையில் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டியில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்களை கடந்த சாதனையை தம்வசம் வைத்துள்ளனர்.

ஆனால், விவியன் ரிச்சர்ட்ஸ் 126 போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடக்க, விராட் கோலி 120 போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

தற்போது ஹஷிம் அம்லா 101 போட்டிகளில் 98 இன்னிங்ஸ்களில் 4,910 ஓட்டங்கள பெற்றுள்ளார். கோலி, ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 90 ஓட்டங்களே தேவையாக உள்ள நிலையில், அதிவேக 5,000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரனாக அம்லா மாறிவிடுவார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று எடுத்த சதம் அம்லா 2014 ஆம் ஆண்டு எடுக்கும் 5 ஆவது ஒருநாள் போட்டி சதமாகும். இதிலும் விராட் கோலியை இந்த ஆண்டு அவர் கடந்துள்ளார். விராட் கோலி 2014 இல் 4 சதங்களையும், ஆரோன் ஃபின்ச் 4 சதங்களையும் எடுத்துள்ளனர்.

ஆம்லா எடுத்த 102 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுக்கும் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 15 இன்னிங்ஸ்களில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டதில் இப்போதுதான் அந்த அணிக்கு எதிராக முதல் சதம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts