கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி வழிபாடு – யாழ். ஆயர் இல்லம் அழைப்பு

தற்போது பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும், துறவற இல்லங்களிலும், இறைமக்களின் இல்லங்களிலும் நாளை மே 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை இக்கருத்துக்காக செபிக்குமாறு குருக்கள், துறவிகள், பொதுநிலை இறைமக்கள் அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

ஆலயங்களில் சனி மாலை 5.30 மணிக்கு மணியொலி எழுப்பப்படும். அவ்வேளையில் ஆலயங்களிலும் துறவற மடங்களிலும் நற்கருணை செய்வார்கள். அவ்வேளையில் பொதுநிலை இறைமக்கள் அனைவரும் தத்தம் இல்லங்களிலிருந்து திரு மணி ஆராதனை, திருச்செபமாலை, இறைவார்த்தை, திருப்பாடல்கள் போன்றவற்றை செபித்து இக்கருத்துக்காக நம்பிக்கையோடு செபிக்குமாறு அழைக்கப்படுகின்றார்கள்.

“நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.”

(யோவான் 15:16).
அருட்பணி. ப. யோ ஜெபரட்ணம்
குரு முதல்வர்

Related Posts